favorite
close
bekwtrust.org /tamil
டிரஸ்ட்

மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக, பீர் ஓ முர்ஷித் அவர்கள் "பாபா எஹ்சானுல்லா கான் வார்சி டிரஸ்ட்" என்ற தொண்டு அறக்கட்டளையை உருவாக்கி, அதை ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.


பொதுமக்களுக்கு வசதி மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 5 கிளை அறக்கட்டளைகளை பாபஜன் உருவாக்கியுள்ளார். தொடர்பு முகவரிகள் "தொடர்பு பக்கத்தில்" கொடுக்கப்பட்டுள்ளன. தினசரி பிரார்த்தனைகளுக்காக ஆங்கில மாதத்தின் ஒவ்வொரு 24 ஆம் தேதியிலும் (25 ஆம் தேதி சில கிளைகளில்) நம்பிக்கையுடைய சீடர்களை கூட்டி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.


இந்த அறக்கட்டளை மற்றும் அனைத்து கிளை அறக்கட்டளைகளிலும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படுகின்றன.


பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களுக்கு (குறிப்பாக பாபாவின் சீடர்களுக்கு) நிதி உதவியை வழங்குவதற்காக "வார்சி நல நிதியம் (WWF)" என்ற நிதியை அமைத்துள்ளது.


மற்றும் வருடாந்திர சந்தன கூடு விழா ( உர்ஸ்) ஒவ்வொரு வருடமும் ஜனவரி 22 முதல் ஜனவரி 25 வரை மதன் பள்ளி பிரதான அறக்கட்டளையில் கொண்டாடப்படுகிறது. இந்த உர்ஸில் பங்கேற்க, உலகில் பல்வேறு இடங்களிலிருந்தும் பாபஜனின் சீடர்கள் சாதி, மதம் பேதமின்றி ஒன்று கூடுகிறார்கள். இந்த உருஸ் மனித நேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.


தற்போதைய டிரஸ்டின் தலைவர், சஜ்தா-நஷீன் மற்றும் ஜா-நஷீன் ஹஸ்ரத் பாபா நசிபுல்லா கான் வார்சி ஆவார். மனிதகுலத்தின் ஆன்மீக, பொருளாதார மற்றும் சமூக காரியங்களில் அதிக ஈடுபாடும் அக்கறை கொண்டவர், " மனிதனுக்கு செய்யும் சேவையே, கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்" என்பது அவரின் குறிக்கோள் மற்றும் தார்மீக மந்திரமாகும். பாபா ஜான்